கட்சி விரோத போக்கை கண்டித்து விஷமருந்திய தவெக நிர்வாகி- வீடியோ வைரல்
அமைச்சர் (MSME) மதன்ராஜாவின் கட்சி விரோத போக்கை கண்டித்து விஷமருந்திய தவெக நிர்வாகியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் (MSME) மதன்ராஜாவின் கட்சி விரோத போக்கை கண்டித்து விஷமருந்திய தவெக நிர்வாகி!
— கல்கி குமார் (@kalgikumaru) September 22, 2026
தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் மதன் ராஜா அவர்கள் கடந்த சில மாதங்களாக மாவட்ட நிர்வாகிகளையும் ஒன்றிய நிர்வாகிகளையும் மாற்றி அமைச்சர் மதன்ராஜாவின் ஆதரவாளர் மற்றும்… pic.twitter.com/Fs0H09Xmeu
தூத்துக்குடி புறநகர் மாவட்டத்தில் தவெக நிர்வாகிகளை மாற்றி, திமுக-வில் இருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்குவதாகக் கூறி, கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமரன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த வீடியோ வைரலாகிவருகிறது. தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் மதன் ராஜா கடந்த சில மாதங்களாக மாவட்ட நிர்வாகிகளையும் ஒன்றிய நிர்வாகிகளையும் மாற்றி அமைச்சர் மதன்ராஜாவின் ஆதரவாளர் மற்றும் உறவினர்களுக்கு பதவி வழங்கி வந்தார். அதேபோல் தூத்துக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் குழந்தை ராஜா என்பவரை மிரட்டி மாற்றிவிட்டு அவரது உறவினரை ஒன்றிய செயலாளராக அறிவித்தார். இதனை அறிந்த குழந்தை ராஜாவின் ஆதரவாளர் மற்றும் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமரன் என்பவர் மனம் உடைந்து வீடியோ வெளியிட்டு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்பொழுது அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருகிறார்.

