பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Apr 10, 2025, 20:10 IST1744296021000

சென்னை பனையூரில் நாளை (ஏப்.11) மதியம் 12 மணிக்கு தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
சென்னை பனையூரில் நாளை (ஏப்.11) மதியம் 12 மணிக்கு தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பூத் கமிட்டி மாநாடு குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. பனையூர் அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.