"போஸ்டல் ஓட்டுகள் முழுமையாக ஸ்கேன், வீடியோ பதிவு செய்வது அவசியம்"- நிர்மல்குமார்

 
”கரூர் துயரத்திற்கு செந்தில்பாலாஜிதான் காரணம் என்று உள்துறை அமைச்சரை வைத்துக் கொண்டே நயினார் நாகேந்திரன் சொல்கிறார்”- நிர்மல் குமார்

போஸ்டல் ஓட்டுகள் முழுமையாக ஸ்கேன், வீடியோ பதிவு செய்வது அவசியம் என தவெக நிர்மல்குமார் வலியுறுத்தியுள்ளார்.

“சிபிஐ அதிகாரிகள் சம்மன் தர வந்தனர்” -  சி.டி.நிர்மல் குமார்

தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல்குமார், “Postal Ballot-ல் நிறைய இடங்களில் Service Voters உட்பட பலரிடமிருந்து வாக்குகள் வருகின்றன. எனவே, எல்லா இடங்களிலும் Postal Ballot-க்கு தனி Ledger முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.எந்தெந்த இடங்களில் இருந்து Postal Ballot வந்தது என்பதை தெளிவாக பதிவு செய்ய வேண்டும்.அனைத்து போஸ்டல் ஓட்டுகளையும் ஸ்கேன் செய்யவேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும், ரெக்கார்டிங் முடிந்த உடன், எங்களுக்கும் (கட்சி பிரதிநிதிகளுக்கும்) அந்த வீடியோவின் நகல் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். கவுன்டிங் சென்டரில் மத்திய படையை வைத்து கூடுதலாக பாதுகாப்பு வழங்கவேண்டும். 

Counting Centres-ல் சில இடங்களில் DMK-வினர் தேவையில்லாத தகராறுகளை ஏற்படுத்த முயற்சி செய்வதாக தகவல் வந்துள்ளது.எனவே, அனைத்து Counting Centres-லும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.மத்திய படை (Central Forces) மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். வெறும் மாநில காவல்துறை போதாது.இதற்கும் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.  EVM-ன் கடைசி இரண்டு ரவுண்டுகள் முடிவதற்கு முன்பாகவே அனைத்து Postal Ballot-ஐயும் எண்ணி முடிக்க வேண்டும். Postal Ballot எண்ணிக்கை முடிந்த பிறகுதான் மட்டுமே EVM-ன் கடைசி இரண்டு ரவுண்டுகள் நடைபெற வேண்டும். பல இடங்களில் Postal Ballot-ஐ கடைசியில் எண்ண முயற்சி செய்யப்படுவதாக தகவல் உள்ளது. இது விதிகளுக்கு எதிரானது. இந்த வரிசை முறையை நேற்று Training-ல் அனைத்து RO-களுக்கும் (Returning Officers) தெளிவாக அறிவித்துவிட்டதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்” என்றார்.