திருச்சியில் தவெக மாநாடு

 
விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது மாநில மாநாடு இந்த மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது மாநில மாநாடு இந்த மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விக்ரவாண்டி, மதுரையை தொடர்ந்து திருச்சியில் மாநாட்டை நடத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதற்கான இடம் முதற்கட்டமான தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் கட்சித் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் இரண்டு மாநாடு போலவே இந்த மூன்றாவது மாநாட்டையும், பிரமாண்டமாக நடத்த விஜயுடன் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். விஜய் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட உள்ளார். எனவே, இந்த மாநாட்டை திருச்சியில் நடத்த கட்சி நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.