தவெக வேட்பாளர் பாரியின் வேட்புமனு தள்ளுபடி... உள் குத்தை தெரிந்து நூதனமாக செயல்பட்ட சாமர்த்தியம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பாரியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எழுத்துப்பிழை மற்றும் மனுவை நிரப்பவில்லை எனக் கூறி பாரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பாரியின் மனுவை, அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த திமுக மற்றும் அதிமுக கூட்டணி போட்டு ஆட்சேபணை தெரிவித்து நிராகரிப்பு செய்ய வைத்தனர். ஆனால் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருந்த தவெகவின் மற்றொரு வேட்பாளரான பாரியின் தந்தையான நெடுஞ்செழியன் அவர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
தவெக ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஆளும் திமுக முதல் லெட்டர்பேடு கட்சிகள் வரை எதிர்த்துவரும் நிலையில் தவெக போட்டியிடும் முதல் தேர்தலில் இதுபோன்ற அடக்குமுறைகள் வரும் என்று எதிர்பார்த்துதான் அனைத்து தொகுதிகளிலும் தவெக மாற்றுவேட்பாளரை மனுத்தாக்கல் செய்யவைத்துள்ளார்கள். சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை தவெக சார்பில், மகனுக்குப் பதிலாக தந்தை நெடுஞ்செழியன் போட்டியிடுகிறார். மேலும் தவெகவின் சின்னமான விசில் சின்னத்திலயே நெடுஞ்செழியன் அவர்கள் போட்டியிடலாம்.



