எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் கடத்தல் - சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு

 
சசிகலா

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் அஇபுதமமுக வேட்பாளர் ராமு தேவருக்கு ஆதரவாக அக்கட்சி பொதுச்செயலாளர் சசிகலா இன்று 08.04.26 இரவு மணிக்கூண்டு அருகே வேனில் இருந்தவாறு பரப்புரை மேற்கொண்டார்.

அப்பொழுது பேசிய சசிகலா, “சேலம் மாவட்டம் எடப்பாடியில் த.வெ.க வேட்பாளர் கடத்தப்பட்டு உள்ளார். வேட்பாளர் மாயமாகி 48 மணி நேரத்திற்கு மேலாகியும் காவல்துறையினர் எவ்வித  நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? எடப்பாடி தொகுதியில் வேட்பாளரை ஒளித்து வைத்துள்ளனர். திமுக-வும், அதிமுக-வும் ரகசியக் கூட்டு சேர்ந்து செயல்படுகிறாது. திமுக ஆட்சியில் யாருக்கு உதவி செய்ய எடப்பாடியில் தவெக வேட்பாளர் கடத்தப்பட்டார்? காவல்துறை யாருடைய உத்தரவுக்கும் கட்டுப்படாமல் கடமையாற்ற வேண்டும்.

எடப்பாடியில் இதே போல் ​எங்கள் தரப்பு தரப்பு வேட்பாளரை கடத்த முயற்சிப்பார்கள் என்பதால் ரகசியமாக மனுத் தாக்கல் செய்தோம். அஇபுதமமுக சார்பில் எடப்பாடியில் சுரேஷ் என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார் தைரியம் இருந்தால் தேர்தலை நேர்மையாகச் சந்தியுங்கள், கடத்தல் அரசியலில் ஈடுபட வேண்டாம்” என்றார்.