மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தவெக பிரசாரப் பாடல்

 
s

கோவையில் அமைச்சர்கள் அருண்ராஜ், சம்பத்குமார், விக்னேஷ் பங்கேற்ற அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தவெக பிரசாரப் பாடல் இசைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தவெக பிரச்சாரப் பாடல்களும், "ஜனநாயகன்" படப் பாடல்களும் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் K.G. அருண்ராஜ், V. சம்பத் குமார், K. விக்னேஷ் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்திருப்பதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மேலூரில் போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனைத் துவக்கி வைத்த அமைச்சர் விஸ்வநாதன், “வாடி வாடி வாடி கைப்படாத சிடி” என்ற பாடலுக்கு மாணவர்கள் மத்தியில் தவெக நிர்வாகிகளுடன் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.