ஆம்புலன்ஸ் மீது ஏறி விஜய்யை எட்டி பார்த்த தவெக தொண்டர்கள்

 
ஆம்புலன்ஸ் மீது ஏறி விஜய்யை எட்டி பார்த்த தவெக தொண்டர்கள்

ஆம்புலன்ஸ் மீது ஏறி விஜய்யை எட்டி பார்த்த தவெக தொண்டர்கள்பொன்னேரி அருகே விஜய் ரோடு ஷோவில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் பின்னால் தொங்கியபடி அட்டகாசம் செய்த ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற ரோட் ஷோ நடைபெற்றது. இந்த ரோட் ஷோவிற்காக சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்தனர். கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் அவரை மீட்ட காவல்துறையினர் ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் கூட்டம் அதிகரித்ததால் பிரச்சார வாகனத்தில் வரும் விஜய் மறைக்காத வகையில் பார்ப்பதற்காக ஆபத்தான முறையில் ஜேசிபி இயந்திரத்தின் பக்கெட், வேன் மீதும், தென்னை மரத்திலும், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீதும், ஸ்பீக்கர் கம்பத்தின் மீது ஏறியும் விஜய் ரசிகர்கள், கட்சியினர் அலப்பறையில் ஈடுபட்டனர். மேலும் விஜயின் பிரச்சார வாகனம் அருகே வந்தபோது காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி தடுப்புகளை தாண்டி எகிறி குதித்து, முண்டியடித்துக் கொண்டு ஓடி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர். விஜயின் பிரச்சார வாகனத்தை மேற்கொண்டு செல்ல விடாதபடி தடுத்து ஆரவாரம் செய்தனர். விஜய் வாகனத்தின் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சென்னை நோக்கி வந்த நிலையில் ரசிகர்கள் அந்த வாகனத்தை தடுத்தபோது காவல்துறையினர் வழி ஏற்படுத்தி ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது ஏறி தொங்கியபடி ரசிகர்கள் அட்டகாசம் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.