10,000 வாக்குகள் வித்தியாசத்தில் புஸ்ஸி ஆனந்த் வெற்றி!
சென்னை தி.நகரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதேபோல் மதுரை மத்திய தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முஸ்தபா சுமார் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெறும் 37 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சுந்தர். சி சுமார் 34,000 வாக்குகள் பெற்றார். அரக்கோணம் தனித்தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் எழில் கரோலின் தோல்வியடைந்தார். அங்கும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் ஜெயக்குமார் டெபாசிட் இழந்தார். தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரான தாமு வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை தான் திமுகவால் பெற முடிந்தது. தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் 'கில்லி சரத் குமார்' வெற்றி பெற்றுள்ளார். அண்ணா நகர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ராம்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

