கோவையில் தமிழக வெற்றி கழக பூத் கமிட்டி மாநாடு?

 
Vijay tvk

கோவையில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு நடத்த அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது கடைசி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சிறிது நாட்களில் நிறைவடையவுள்ள நிலையில், அதன் பின்னர் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த 28ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட 2,000 பேர் பங்கேற்றனர்.

இந்த நிலையில், கோவையில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு நடத்த அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பூத் கமிட்டி மாநாடு நடத்த் பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.