பனை விதைகள் நடும் விழாவில் த.வெ.க. நிர்வாகிகள் இடையே மோதல்..!
பனை விதைகள் நடும் விழாவில் த.வெ.க. நிர்வாகிகள் இடையே மோதலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில், ஒரு கோடி பனை விதை நடவு செய்யும் பணி, புவி காப்பு அறக்கட்டளை மற்றும் சேவை சங்கங்கள் சார்பில் நடந்தது. இப்பணியை தொடங்கி வைக்க கலெக்டர் ஸ்ரீகாந்த், உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் ஆகியோர் தரங்கம்பாடிக்கு வந்து, பனை விதை நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தனர்.
அப்போது கடற்கரையில், தவெக மாவட்ட செயலர் கோபிநாத் ஆதரவாளருக்கும், திமுகவில் இருந்து தவெகவில் இணைந்த மயிலாடுதுறை நகராட்சி கவுன்சிலர் ரஜினி என்பவரின் ஆதரவாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர். தொடர்ந்து வாக்குவாதம், கூச்சல் ஏற்பட்டதால் அமைச்சர் வெங்கட்ரமணன், கட்சி நிர்வாகிகளை அழைத்து, 'சண்டை போடுவதற்காக இந்நிகழ்ச்சிக்கு வரவில்லை; கட்சியினர் கோஷ்டி பூசல் இன்றி ஒற்றுமையாக செயல்பட வேண்டும்' எனக்கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
TVK vs TVK..! பனை விதைகள் நடும் விழாவில் த.வெ.க. நிர்வாகிகள் இடையே மோதல்.. சமாதானப்படுத்திய அமைச்சர் வெங்கடரமணன்.. காரணம் என்ன..? #Mayiladuthurai | #TVK |#Fight |#MinisterVenkataramanan |#PolimerNews https://t.co/6kQJcsADSU
— Polimer News (@polimernews) October 23, 2026

