பாஜகவுடன் தவெக மறைமுக கூட்டணியா?- அருண்ராஜ் பரபரப்பு பேட்டி

 
அருண்ராஜ் அருண்ராஜ்

பாஜகவுடன் தவெகவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த உறவும் கிடையாது  என தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.


மதுரை காமராஜர் சாலையில் நடைபெற்ற தனியார் ஏற்றுமதி  கண்காட்சியில் பங்கேற்ற பின்னர் தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் அளித்த பேட்டியில்,”தமிழக வெற்றிக்கழக தேர்தல் அறிக்கையில் ஏற்றுமதி தொழிலை ஊக்குவிப்பதற்கு தனியாக மேம்பாட்டு வாரியம் அமைப்பது குறித்து அறிவிப்பு இடம்பெறும். ஈரோட்டில் தவெக பிரச்சார கூட்டம் திட்டமிட்டபடி கண்டிப்பாக நடக்கும். அதிமுகவில் இருந்து வேறு தலைவர்கள் யாரும் தவெகவுக்கு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அரசியல் கட்சிகளை சாதாரணமாக எடை போடக்கூடாது. தவெகவுடன் யார், எப்போது கூட்டணிக்கு வர வேண்டுமோ, அப்போது வருவார்கள். கொள்கை எதிரியான பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த உறவும் இருக்காது” என்றார்.