“தவெகவில் செங்கோட்டையன்! திமுகவிற்கு நாளை ரெட் அலர்ட் ஆரம்பம்”- அருண்ராஜ்

 
அருண்ராஜ் அருண்ராஜ்

நாளை ஒருநாள் காத்திருங்கள் நல்ல செய்திவரும் என தவெக கொள்கை பரப்பு பொதுசெயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.


காலையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், மாலையில் சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்ற செங்கோட்டையன், அவருடன் பல மணிநேரம் ஆலோசனை நடத்தினார். நாளை காலை 10 மணிக்கு பனையூர் அலுவலகத்தில் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். செங்கோட்டையன் உடன் அவரது ஆதரவாளர்களும் தவெகவில் நாளை இணைய உள்ளனர். முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் தவெகவில் இணைகின்றனர்.
 
இந்நிலையில் நாளை கே.ஏ.செங்கோட்டையன் இணைப்பு குறித்த கேள்விக்கு, பதிலளித்த தவெக கொள்கை பரப்பு பொதுசெயலாளர் அருண்ராஜ், “இத்தனை நாட்கள் வெயிட் பண்ணீங்க.. நாளைக்கு தெரிய வரும்..இன்னும் ஒரு நாள் காத்திருங்கள்.. நல்ல செய்தி நாளை வரும்.. திமுகவிற்கு நாளை ரெட் அலர்ட் ஆரம்பம்” என்றார்.