"கட்சி விதிகளை மீறினால் பதவி பறிக்கப்படும்"- தவெகவினருக்கு ஆனந்த் எச்சரிக்கை

 
anand

கட்சி நிர்வாகிகள் தவறாக நடப்பது, கட்சி விதிகளை மீறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கட்சிப் பதவி பறிக்கப்படும் என  த.வெ.க. கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கட்சி விதிகளை மீறுபவர்களின் பதவிகள் பறிக்கப்படும் எனவும், தவறாக நடந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அமைச்சர் என். ஆனந்த் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “மாற்றத்திற்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர்; முதலமைச்சர் விஜய்க்காக மட்டுமே மக்கள் வாக்களித்தனர் என்பதை மனதில் கொண்டு, எதையும் எதிர்பார்க்காமல் கட்சிப் பணிகளைச் செய்யுங்கள். நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் கட்சியினருக்கு வேண்டியதை முதலமைச்சர் நிச்சயம் செய்வார்" எனத் தெரிவித்துள்ளார்.