“யார் யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதை விஜய் மட்டுமே முடிவு செய்தார்”- புஸ்ஸி ஆனந்த்

 
புஸ்ஸி ஆனந்த்

இதுவரை 114 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியுள்ளார்.

ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகத்தின் 6 ஆம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் மற்றும் அறிவிப்பு கூட்டம் விஜய் தலைமையில் பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ற்கனவே 95 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆம்  கட்டமாக விருதுநகர், சென்னை விருகம்பாக்கம், திருவள்ளூர், திருப்பூர், செங்கல்பட்டு, மதுரை புறநகர், கூடலூர் உள்ளிட்ட 19 மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று நேர்காணல் நடத்தப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் புஸஸ் ஆனந்த், “இதுவரை மொத்தம் 114 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்” என்றார். விஜயின் கார் ஓட்டுனரின் மகனுக்கு பதவி வழங்கியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் , அவர் சிறுவயதிலிருந்தே நற்பணி இயக்கத்தில் பணியாற்றி வருகிறார், யார் யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதை தலைவர் முடிவெடுத்துள்ளார்.