செப். 9ல் த.வெ.க கூட்டணி கட்சிகள் கூட்டம்!
Updated: Sep 4, 2026, 18:27 IST1788526626140
ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி கட்சிகள் கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

தவெக கூட்டணி கூட்டத்திற்கு, ஆட்சிக்கு ஆதரவு தந்த கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கட்சிகளின் செயலாளர்களை சந்தித்து தவெக அமைச்சர்கள் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர். நாளை காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் ஆதரவு கட்சிகளுடன் விரிவான அரசியல் ஆலோசனை நடைபெறவுள்ளது. முதல் கூட்டத்தில் பங்கேற்காத இடதுசாரிகளுக்கு முதலாவதாக அமைச்சர்கள் நேரடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

