#BREAKING தவெக நிர்வாகி அஜிதா டிஸ்சார்ஜ்
தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னலை திமுக கை கூலி என கூறியதாலும் கட்சியில் எந்த பதவியும் வழங்காததாலும் மனம் உடைந்து கடந்த 25-ம் தேதி தூக்கமாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்று தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டிருந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு பிறகு உடல் நிலை சீரான நிலைக்கு திரும்பியதால் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு வீடு திரும்பினார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து வந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னலுக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தார். ஆனால் அவருக்கு அந்த பதவி வழங்காதது மட்டுமின்றி, அஜிதா ஆக்னல் திமுக கை கூலி என கூறியதால் மனம் உடைந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் விரக்தியில் கடந்த 25-ம் தேதி 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்ச்சி செய்து தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் உடல் நிலை சீரான நிலைக்கு திரும்பியதால் கடந்த 4-நாட்களுக்கு பிறகு மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு இன்று வீடு திரும்பினார். முன்னதாக மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த அவர் அங்கிருந்த சுகம் தரும் விநாயகரை வணங்கிவிட்டு பின்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது ஆதரவாளங்கள் ஏராளமான வந்திருந்தனர்.


