திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெகவினர் அட்டகாசம்!

 
s

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் அனுமதியின்றி நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் உள்ளிட்டோ அனுமதியின்றி நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் முதல்வர் விஜய் படத்தை வைக்க வலியுறுத்தி நகர்மன்ற உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகத்திற்குள் செல்ல தவெகவினருக்கு, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், போலீஸ் ஒழிக என அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் திமுகவினரை கவுன்சிலர் தள்ளிவிட்டு போலீஸ் ஒழிக என்றும் தவெகவினர் முழக்கமிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.