"இந்த சவுண்டுலாம் இங்க விட வேண்டாம்... தலித் மக்களுக்காக 75 வருஷமா என்ன செய்தீர்கள்?"- திமுகவை பந்தாடிய ஆதவ் அர்ஜுனா
இந்த சவுண்டுலாம் இங்க விட வேண்டாம்..! நீங்க கத்தினால் பயந்துடுவோமா..? எந்திரிச்சு நின்னிங்கனா நாங்களும் எழுந்து நிற்போம் பார்த்துக்கோங்க..! தலித் மக்களுக்காக 75 வருஷமா என்ன செய்தீர்கள்..? என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு சரமாரி கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.எல்.ஏ. ராஜா பேச்சுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக Beast படத்தை தடை செய்ய வேண்டும் என சொன்னவர் அந்த த.வெ.க எம்.எல்.ஏ..! அதற்கு உங்க பதில் என்ன..? ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு சமூக இயக்கம் என்று இதே அவையில் கலைஞர் சொன்னாரே..? 1999-2003 பா.ஜ.க கூட்டணியில் இருந்த கலைஞர் என்ன என்ன பேசினார்..? கோத்ரா கலவரம் நடந்த போது தி.மு.க என்ன குரல் கொடுத்தது..? 50 ஆண்டு வரலாற்றை நாங்களும் எடுத்து போட்டு பேசுவோம்..? பா.ஜ.க அமைச்சரவையில் இருந்து தி.மு.க விலகாதது ஏன்..? இந்த சவுண்டுலாம் இங்க விட வேண்டாம்... நீங்க கத்தினால் பயந்துடுவோமா? எந்திரிச்சு நின்னிங்கனா நாங்களும் எழுந்து நிற்போம் பார்த்துக்கோங்க..! தலித் மக்களுக்காக 75 வருஷமா என்ன செய்தீர்கள்? அவர்கள் இன்னும் அதே குடிசையில் தான் இருக்காங்க.. காலணி என்ற பெயரை மாத்திட்டீங்க..? அப்போ உங்க உள்நோக்கம் என்ன..? சாதியை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற நினைப்பில் தான் தவெக அரசு சமூகநீதித்துறை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.காலனி என பெயரை மாற்றினீர்கள். தற்போது சாதி ஒழிந்துவிட்டதா? செய்த பாவத்தை, வரலாற்றை மறைக்க முடியாது, எங்களுக்கும் வரலாறு தெரியும். தலித் மக்களில் 28% பேர் குடிசைகளில் தான் உள்ளனர், 75 ஆண்டுகளில் தலித் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை
2015 முதல் 2021 வரை நான் திமுகவில் பணியாற்றினேன். 2021-ல் என்னுடைய பணி என்னவென்று நான் சொல்ல ஆரம்பித்தால்... நான் இருந்த இடத்தில் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. உங்கள் தலைவர் ஸ்டாலினுக்குத் தெரியும். 6 ஆண்டுகளில் என்ன நடந்தது என்று சொல்ல ஆரம்பித்தால், உங்களுக்கு நல்லதல்ல.” என்றார்.

