“திமுக தேர்தலில் தோற்றதற்கு சபரீசன், உதயநிதி காரணம்! இன்ஸ்டாகிராம் அல்ல”- ஆதவ் அர்ஜூனா

 
ச்

தவெகவை புதிய அதிமுகவாக பார்ப்பதாக ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் கூறினர். அதிமுகவினரை தவெகவுக்கு அன்புடன் அழைக்கிறோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “திமுக - அதிமுக - பாஜக சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதாக கூட்டணிக் கட்சிகளே குற்றம் சாட்டின. திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால்தான் சி.வி.சண்முகம் அணி வெளியே வந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு காரணமாக இபிஎஸ்-ஐ முதல்வராக்கும் முயற்சியை திமுக கைவிட்டது. திமுக தேர்தலில் தோற்றதற்கு சபரீசன், உதயநிதி ஆகியோர்தான் காரணம். 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துவிட்டு மரியாதை நிமித்தமாக என்னைப் பார்த்தனர். அதிமுகவிலிருந்து வந்த 3 பேரும் தவெகவில் இணைந்ததில் எவ்வித ஜனநாயக மீறலும் இல்லை. தவெகவை புதிய அதிமுகவாக பார்ப்பதாக ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் கூறினர். அதிமுகவினரை தவெகவுக்கு அன்புடன் அழைக்கிறோம். திமுக மக்கள் தீர்ப்புக்கு எதிராக செயல்பட முயன்றது. திமுகவின் சந்தர்ப்பவாத அரசியல் சதியை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முறியடித்தோம்.

ஏன் தோற்றோம் என தெரியாமல், தவெகவின் வெற்றியை பொறாமையுடன் அணுகுகிறது திமுக. சமூக வலைத்தளங்கள் காரணமாகத் தோற்றதாக மு.க.ஸ்டாலினும் உதயநிதியும் கூறுகின்றனர். இன்ஸ்டாகிராமால் திமுக தோற்றது என ஸ்டாலின் கூற்கிறார். ஆட்சியமைப்பதற்கு திமுக, அதிமுக, பாஜக கைகோர்க்க முயன்றனர். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க முயற்சித்தனர். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றது பற்றி ஏன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல மறுக்கிறார்?த.வெ.கவை இன்னோரு அதிமுகவாக பார்க்கிறார்கள். 20 முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள், எங்களுடன் பேசி வருகிறார்கள். விரைவில் அவர்கள் த.வெ.க.விற்கு வருவார்கள்” என்றார்.