தவெக கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில்களை வீசிய திமுகவினர்- ஆதவ் கொந்தளிப்பு

 
ச்

ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்திற்கு நடுவே மது பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வில்லிவாக்கம் த.வெ.க கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென எழுந்து மைக் முன் வந்த தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா  ஒரு கண்ணாடி துண்டை காண்பித்து, 'கூட்டத்தில் பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசி தாக்குகின்றனர். அவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். எங்களுக்கு எவ்வளவு கொடுமை செய்கிறீர்கள்? கரூரிலிருந்து எவ்வளவு இடைஞ்சல்கள்? எங்களுக்கு நியாயம் கிடைக்காமல் நான் இங்கிருந்து நகரமாட்டேன். கைதாகினாலும் பரவாயில்லை' என கொந்தளித்து பேசியிருந்தார்.


திடீரென ஆதவ் கொந்தளித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆதவ்வின் பேச்சை தொடர்ந்து கூட்டத்தில் இடையூறு செய்த சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் தொடர்ந்து நடந்து வருகிறது. முன்னதாக காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  உடனடியாக காவல்துறை விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தான் இங்கிருந்து புறப்பட மாட்டேன் என ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.