பெரும் பரபரப்பு! கொலை வழக்கு குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்!

 
Tn

தூத்துக்குடி அருகே தாய், மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் மேலாநம்பிபுரம் கிராமத்தில் தாய், மகள் கொலை செய்யப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் முனீஸ்வரன் என்பவர் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், முனீஸ்வரன் பதுங்கி இருக்கும் இடத்தை அறிந்து போலீசார் அவரை கைது செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது முனீஸ்வரன் போலீசாரை தாக்கிவிட்டு தப்பித்து ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற முனீஸ்வரனை போலீசார் சுட்டுப்பிடித்தனர். 
முனீஸ்வரனின் வலது காலில் சுட்டு அவரை பிடித்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த முனீஸ்வரன், காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய், மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.