அரசியலில் திருப்பம் : செங்கோட்டையனுக்கு அடுத்து தவெகவில் இணைய உள்ளார் ஓபிஎஸ்?
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணையப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதிசெய்யும் விதமாக நேற்று (நவ.26) விஜயை நேரில் சந்தித்து பேசினார் செங்கோட்டையன். அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் பனையூரில் உள்ள தவெக அலுவலத்தில் வைத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.