கலவரமான ஊடக விவாதம்- செய்தியாளர்கள் மண்டை உடைப்பு

 
ச்

தனியார் தொலைக் காட்சி தேர்தல் பயண விவாத மேடை கலவரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகரநேம்பு திடல் பகுதியில் தனியார் தொலைக்காட்சி (நியூஸ் தமிழ்) தேர்தல் பயணம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் சிவகங்கை மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கை மாறன், அதிமுக சார்பில் முன்னாள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன், நாம் தமிழர் கட்சி சார்பில் இடும்பவனம் கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஆரம்பித்த ஒன்பது நிமிடங்களிலேயே இடும்பாவனம் கார்த்தி திராவிட மாடல் ஆட்சி குறித்த பேச்சுக்கு ஆதாரத்துடன் பேசுமாறு திமுக சார்பில் பேசிய சேங்கைமாறன் கூறினார்.


பார்வையாளர் பகுதியில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து சேர்கள் வீசப்பட்டது. பெரும் கலவரமாக மாறி ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.காவல் துறையினர் தலையிட்டு நிகழ்சியை நிறுத்தினர். சேர்கள் வீசப்பட்டதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜேஷ் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் செய்தியாளர் சதாம் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் நிகழ்சிக்கு அனுமதியளித்திருந்தது குறிப்பிடதக்கது