பாஜக - பாமக இடையே இழுபறி

 
tn

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை அமைத்தன. இருப்பினும் இக்கூட்டணியில் கடந்த சில நாட்களாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக,  கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றொரு புறம்  அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வருகிறது. பாஜக  பாமக, தேமுதிக , தமாக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

annamalai

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக - பாமக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி எனத் தகவல் வெளியாகியுள்ளது.

PMK

12 தொகுதி + 1 ராஜ்யசபா இடத்தை பாமக கேட்பதாகவும் பாஜக 7 இடங்களை தர முன்வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக ஒதுக்கும் தொகுதிகளை பாமக ஏற்க முன்வராததால் ஜி.கே.வாசன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.