“93 ஆண்டுகளுக்கு பிறகு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு... மோடிக்கு நன்றி”- டிடிவி தினகரன்

 
ttv ttv

93 ஆண்டுகளுக்கு பிறகு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

From anti-BJP to pro-Modi, OPS foe to friend — what's behind the resurgence  of TTV Dhinakaran

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதலை வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது.  மக்கள் அனைவரின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்துவதற்கு அடிப்படையான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நேரத்தில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் புள்ளி விவரங்களுடன் கூடிய வலுவான வாதங்களை முன்வைப்பதற்கு உதவக்கூடிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த முடிவு செய்திருக்கும் மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.