“பார்க்க அமைதியாக இருந்துகொண்டு.. மிகவும் நரித்தனமாக, விஷமத்தனமாக விஜய் செயல்படுகிறார்”- தினகரன்
பார்க்க அமைதியாக இருந்துகொண்டு.. மிகவும் நரித்தனமாக, விஷமத்தனமாக விஜய் செயல்படுகிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுபோல் தவெக அரசு தந்திரமாக செயல்படுகிறது. விஜய் அமைதியாக தெரிகிறாரே தவிர, மிகவும் நரித்தனமான, விஷமத்தனமான செயல்களை செய்கிறார்.அவர் ஆட்சிக்கு வருவோம் என நினைத்து தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கவில்லை. ஆகவே அதனை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியும் விஜய் எடுப்பதாக தெரியவில்லை. முதலில் அவர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்த புரிதல் இருக்குமா என்றே தெரியவில்லை. சட்டமன்றத்தில் இருந்து அவர்தான் வெளியே எழுந்து சென்றார். 3 நாட்கள் கழித்து சினிமா இயக்குநர் மாதிரி ஒரு அறிக்கையை படிக்கப்போகிறார். தவெக அமைச்சர்களுக்கு பார்த்துகூட படிக்க தெரியவில்லை. பேரவையில் அனுபவம்சாலியான அதிமுக, திமுக எம்.எல்.ஏக்களை உதாசனப்படுத்துகின்றனர். தொகுதியில் யார் வேட்பாளர்கள் என்றே தெரியாமல் ஒரு புரிதல் இல்லாமல் மக்கள் வாக்களித்துவிட்டனர். ஆட்சிக்கு வர பெருபான்மையே இல்லை. தில்லுமுல்லு செய்து, மற்ற கட்சியில் இருப்பவர்களிடம் பதவி தருவதாக பேரம் பேசி ஆட்சிக்கு வந்துள்ளனர்” என்றார்.

