“ஓபிஎஸ் பசுந்தோல் போர்த்திய புலி"- டிடிவி தினகரன் விமர்சனம்

 
ச்

ஓ. பன்னீர்செல்வம் பசுத்தோல் போர்த்திய புலியாக இதுவரை இருந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது என ஓ.பி.எஸ். குறித்த கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் அமமுக மாவட்ட செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. பன்னீர்செல்வம் இதுவரை பசுந்தோள் போர்த்திய புலியாக இதுவரை இருந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. எவ்வளவு வக்கிர மனம் இருந்தால் எவ்வளவு குரோத மனம் இருந்தால் புரட்சித் தலைவரையும் அம்மா அவர்களின் தொண்டர்களையும் இழிவுபடுத்தி விட்டார் என்பதுதான் எங்கள் வருத்தம். ஓபிஎஸ் அவர்கள் அரசியலில் நிலைத்திருக்க வேண்டும். அதற்காக அவர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம்,அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால் சட்டமன்றத்தில் அவரது ஆசி பெற்ற ஐயப்பன் அவர்கள் பேசியது எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கோடிக்கணக்கான தொண்டர்களின் மனதை காயப்படுத்தி உள்ளது.


புரட்சித் தலைவர் திமுக என்கிற தீய சக்தியை எதிர்த்துதான் கட்சி நடத்தினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கி எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியில் இருந்தவரை 15 ஆண்டுகள் ஆட்சிக்கு வராமல் திமுகவை தடுத்து வைத்திருந்தார். அதன் பிறகு திமுகவை வலுவாக எதிர்த்த ஒரு அரசியல் சக்தி அம்மா அவர்கள், இப்படிப்பட்ட நிலையில் சட்டமன்றத்திலே எம்ஜிஆர் அவர்கள் ஆசியும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆசியோடு ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராவார் என ஐயப்பன் தெரிவித்தார். இது மிகவும் வேதனைக்கு உரியது, கண்டனத்திற்கு உரியது. இந்தியாவை உலக நாடுகளிலேயே வல்லரசு நாடாக வளர்ந்து வரும் நாடாக பிரதமர் உழைத்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உலக நாடுகளிலேயே வளர்ந்த நாடுகள் போட்டி போடும் அளவிற்கு இந்தியா முன்னேறி இருப்பதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி அவர்களின் நல்லாட்சி தான். உலக நாடுகளை ஐநா சபை பிரதிநிதிகள் கலந்து கொள்கிற ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் இவ்வளவு கீழ்த்தரமாக நடவடிக்கையில் ஈடுபட்டனர். அமமுகவுக்கு பாஜக மூலம்தான் தொகுதிப் பங்கீடு நடைபெறும்.

எதிர்ப்பை பதிவு செய்வதற்கு எவ்வளவோ வழிமுறைகள் உள்ளது. காங்கிரஸ் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறுமான கதையாக தான் போய் உள்ளதற்கு காரணம்  அவர்களது இழிவான செயல்பாடுகள்தான்.தமிழகத்தில் மீண்டும் அம்மா அவர்களின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது திமுக ஆட்சியில் பட்டி தொட்டி எல்லாம் கஞ்சா பழக்கம் கரை புரண்டு ஓடுகிறது. பள்ளி மாணவர்களே கஞ்சா பயன்படுத்தும் அளவிற்கு குட்டி சுவராகிவிட்டது. என்டிஏ கூட்டணி தமிழகத்திலே அதிமுக தலைமையில் அமைந்துள்ளது. பிஜேபி தலைமையிலான கூட்டணியில் என்டிஏ கூட்டணியில் சேர்ந்து உள்ளேன். இந்த கூட்டணி போதுமான பலத்துடன் உள்ளது. இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்துவோம்” என்றார்.