“விஜய் படத்துக்கு பிளாக் டிக்கெட் விற்கிறார்கள்... அந்த ஊழலையே அவரால் ஒழிக்க முடியவில்லை”- டிடிவி தினகரன்

 
சி சி

வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அம்மா (ஜெயலலிதா) இருந்த இடத்தில் இப்போது மோடிதான் எங்களுக்கு இருக்கிறார்.. தமிழ்நாட்டையே தத்தெடுத்து, தேவையான அனைத்தையும் அவர் தருவார். ஓ.பி.எஸ். உயர்வுக்கு எனக்கும் சிறு பங்கு இருக்கு.. அன்று, அவர் யார் பேச்சையும் கேட்காமல் ஒரு வாரம் பொறுத்திருந்தால் மீண்டும் முதல்வர் ஆகியிருப்பார்.. அதனால் ஓ.பி.எஸ். நல்ல முடிவை எடுப்பார். வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. 8 ஆண்டுகள் என்னுடன் போராடியவர்களை எம்.எல்.ஏக்கள் ஆக்க வேண்டும். என் சார்பில் போட்டியிடுபவர்கள் வென்று அமைச்சராக வேண்டும் என்பதே என் ஆசை. என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். முடிந்தால் 2,3 பேரை அமைச்சராக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அதற்காக அழுத்தம் தர மாட்டேன். பங்காளி சண்டை இல்லாத குடும்பமே இல்லை.. அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று தான் நான் கூறினேன்.. அண்ணன் தம்பியாக தான் நாங்கள் இருக்கோம்.

விஜய் படத்துக்கு பிளாக் டிக்கெட் விற்கிறார்கள். அந்த ஊழலையே அவரால் ஒழிக்க முடியவில்லை. வீட்டுக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு கொள்கை எதிரி, புடலங்காய் எதிரின்னு சொல்றீங்க. முதல்ல வெளிய வாங்க. வெளிய வந்து ஊடகங்களை சந்திச்சு பேசுங்க. பிளாக் டிக்கெட் விற்பனையை தடுக்காதவர் ஊழலை ஒழிப்பாரா? எங்கள் கட்சி தலைவரின் படத்தை வைத்துக் கொண்டு எங்கள் கட்சியையே ஊழல் கட்சி எனக் கூறுவதா? உங்கள் திரைப்படத்தில் கள்ள டிக்கெட் விற்பனையில் நடைபெறும் ஊழல்களை தடுத்து நிறுங்கள்” என்றார்.