தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் - டிடிவி. தினகரன்..!

 
1 1

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் அவரச கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சி தலைமையக்ததில் நடைபெற்றது. 

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறோம். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம். பழைய விஷயங்களை நினைத்துக்கொண்டு கட்சி மற்றும் தமிழ்நாட்டு நலனை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற வள்ளுவரின் வாக்குப்படி கூட்டணியை முடிவு செய்துள்ளோம். மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். தமிழகத்தில் நல்லாட்சி அமைய உறுதுணையாக இருப்போம்" என்றார்.

இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலை சந்திக்க இருப்பதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.