திருமலை நாயக்கரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் - டிடிவி தினகரன்!

 
TTV

மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை தலைநகரை ஆட்சி செய்த மன்னர்களில் புகழ்பெற்றவராகவும், தமிழர்களின் பண்பாட்டை கோயில் திருவிழாக்களின் மூலம் வெளிப்படுத்தியவருமான மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று.


ஜாதி, மதம், பேதங்களை கடந்து மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் மகத்தானவராக திகழ்ந்த திருமலை நாயக்கர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.