ஒபிஎஸ் என்றைக்கும் தனிமைப்படுத்தப்பட மாட்டார் - டிடிவி தினகரன் பேட்டி

 
ttv dhinakaran ttv dhinakaran

தி.மு.க-வை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக-பாஜக மீண்டும் கூட்டணி அமைத்தது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என முன்பே வலியுறுத்தினேன். தி.மு.க ஆட்சி தொடரக்கூடாது என்று நினைக்கக்கூடிய ஒத்த கருத்துள்ள கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும்.
தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படுகிறோம். தி.மு.க-வை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். என்டிஏவில் அ.தி.மு.க இணைந்ததை வரவேற்கிறேன்.ஒபிஎஸ் என்றைக்கும் தனிமைப்படுத்தப்பட மாட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக தொடர்கிறது. ஒருசிலர் சுயநலத்தால் 2021-ல் திமுக ஆட்சி வந்தது. இந்த முறை அந்த தவறு நடக்காமல் மோடி, அமித்ஷா சரியாக கையாளுவார்கள் என கூறினார்.