பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் - டிடிவி தினகரன் அறிவிப்பு!

 
TTV

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு, அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினரன் அறிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டு, அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடும் செயப்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில் பாமக மற்றும் தேமுதிகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே பாஜகவும் மெகா கூட்டணி அமைக்க திட்டம் தீட்டி வருகிறது. அமமுக, சமக, தமிழ்மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தங்களது கூட்டணியில் சேர்ந்துள்ளது. தேமுதிகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு, அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி தொடர்பாக பாஜகவிடம் கடந்த 6 மாதங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். எந்த உறுத்தலும் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். தாமரைச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று பாஜக எங்களை நிர்பந்திக்கவில்லை. எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்ற பிரச்னை கிடையாது. எங்களின் தேவை என்ன என்பது பாஜகவுக்கு தெரியும் என கூறினார்.