சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடிய மகான் அய்யா வைகுண்டர் - டிடிவி தினகரன்

 
TTV TTV

அய்யா வைகுண்டர் அவர்கள் அவரித்த இந்நாளில் அவர் விரும்பிய சாதி, பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" எனும் அருள்மொழியை வழங்கி சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபட்ட அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த தினம் இன்று.


சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடிய மகான் அய்யா வைகுண்டர் அவர்கள் அவரித்த இந்நாளில் அவர் விரும்பிய சாதி, பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.