வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் - டிடிவி தினகரன்

 
TTV

வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் உறுதியோடு இறுதி வரை போராடிய விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த தமிழ் இலக்கியவாதியுமான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினம் இன்று.


ஆங்கிலேயர்களின் அரசியல் நெருக்கடியோடு பொருளாதார நெருக்கடியையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு அரசியல்வாதியாக, அறிஞராக, வழக்கறிஞராக தேச நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம் என டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.