முனைவர் பட்டம் பெற்ற மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனுக்கு டிடிவி தினகரன் பாராட்டு!

 
TTV

அகதிகள் குறித்து ஆய்வு செய்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனுக்கு டிடிவி தினகரன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அகதிகள் குறித்து ஆய்வு செய்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அகதிகள் குறித்து ஆய்வு செய்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள மூத்த பத்திரிக்கையாளர் திரு.ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுத்தேடல் மற்றும் விடாமுயற்சியின் மூலம் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் திரு.ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்கள் அடுத்துவரும் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதில் தொடர்ந்து முன்னோடியாக திகழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.