அன்பு நண்பர் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் சீமானின் பிறந்த நாளையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதள பக்கத்திலும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் அன்பு நண்பருமான திரு.சீமான் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 8, 2023
தான் கொண்ட கொள்கையில் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து பயணிக்கும் திரு.சீமான் அவர்கள் நல்ல உடல்நலத்தையும், நீண்ட…
இந்த நிலையில், சீமானுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் அன்பு நண்பருமான திரு.சீமான் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தான் கொண்ட கொள்கையில் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து பயணிக்கும் திரு.சீமான் அவர்கள் நல்ல உடல்நலத்தையும், நீண்ட ஆயுளையும் பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.