சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி- டிடிவி தினகரன் வாழ்த்து!

 
TTV

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் திரு. கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஃபிரெஞ்சுப் பாதிரியாரின் அனுபவத்தையும் பழங்குடி பண்பாட்டையும் விளக்கும் (THE BLACK HILL) எனும் நாவலை கருங்குன்றம் என்ற தலைப்பில் மொழி பெயர்த்து சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு. கண்ணையன் தட்சிணா மூர்த்தியின் ஆக்கப்பூர்வமான எழுத்துப் பணிகள் தொடர எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.