புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு டிடிவி தினகரன் வாழ்த்து!
புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் எனும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். @actorvijay @tvkvijayoffl
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 2, 2024
இந்த நிலையில், புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக வெற்றி கழகம் எனும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.