தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு மிகுந்த வேதனையளிக்கிறது - டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

ஆளுநரின் உரை, தமிழக மக்கள் ஒவ்வொருவரும் புறக்கணிக்க வேண்டிய கற்பனைக்கும் எட்டாத திமுக அரசின் கட்டுக்கதை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நிர்வாகத்தின் கொள்கைகளையும், நடப்பாண்டுக்கான செயல் திட்டங்களையும் உள்ளடக்கி இருக்க வேண்டிய ஆளுநரின் உரையில், நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் தற்பெருமைகளும், கற்பனைக்கு எட்டாத கட்டுக்கதைகளும் நிறைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கொலை கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற சூழலில் இருக்கும் தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக நிர்வகிக்கப்படுவதாகவும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு உள்ளான துயரச் சம்பவத்தை மறைத்து பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி குறிப்பிட்டிருப்பது வெட்கக் கேடான செயலாகும். செய்யப்பட்டிருப்பதாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொடங்கி மாநிலத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை பட்டிதொட்டியெங்கும் பரவியிருப்பதோடு, பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போதைப் பொருட்களுக்கு எதிராக பாரபட்சமற்ற கடுமையான அணுகுமுறையை கடைபிடித்து வருவதாக கூறுவது நகைப்புக்குரியது.

ttv

விவசாயிகளின் தொடர் எதிர்ப்புகளை மீறி விளைநிலங்களையும், நீர்நிலைகளையும் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி தொழிற்சாலைகளை அமைத்துவரும் திமுக அரசு, தற்போது விளை நிலங்களை பாதுகாத்து பராமரித்து வருவதாக கூறுவது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும். பால்விலை உயர்வில் தொடங்கி மின்சாரக் கட்டணம் வரை அனைத்து விதமான கட்டணங்களையும், வரிகளையும் பலமுறை பன்மடங்கு உயர்த்தி ஏழை, எளிய மக்களின் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றிய திமுக அரசு, தற்போது வறுமையை ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் என்ற திட்டத்தை தொடங்க இருப்பதாக ஆளுநர் உரையில் அறிவித்திருப்பது கேலிக்கூத்தானது. மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் அனைத்து அரசு மருத்துவமனைகளும் சுகாதாரமற்ற நிலையங்களாக காட்சியளிக்கும் நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலமாகவும், மருத்துவத் தலைநகராகவும் திகழ்ந்து வருவதாக கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.

ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் புதிய பேருந்துகள் வாங்க பெயரளவில் ஒதுக்கப்படும் நிதியைப் போலவே, ஆளுநர் உரையிலும் 6,104 புதிய பேருந்துகள் வாங்க பணிகள் நடைபெற்றுவருவதாக குறிப்பிட்டிருப்பதும், ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது உயிர் பயத்துடனே வாழக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு நிரந்தர வெள்ளத்தடுப்பு தொடர்பாக எந்தவித திட்டங்களும் இடம்பெறாததும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மாநில உரிமையை பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவும், தொழில் வளர்ச்சியை பெருக்கவும். வேலைவாய்ப்பை உருவாக்கவும்,பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், கள்ளச்சாராயம் உட்பட சட்டவிரோத மதுவிற்பனையை கட்டுப்படுத்தவும், விண்ணை முட்டும் விலைவாசியை குறைக்கவும் எந்தவித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லாத ஆளுநரின் உரை,கடந்த ஆண்டுகளின் உரையின் மறுபதிப்பாகவே அமைந்திருக்கிறது. மொத்தமாக சொல்ல வேண்டுமென்றால் மக்களுக்கும், மாநிலத்திற்கும் பயனளிக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண் டிய ஆளுநர் உரை, திமுக அரசின் குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது. இதனிடையே, நூற்றாண்டு கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக சட்டப்பேரவையில் காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் அவை மரபுகளை மீண்டும் மீறியுள்ள மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடு மிகுந்த வேதனையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.