மூத்த பத்திரிகையாளர் பி.மணி ஷ்யாம் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்!

 
TTV Dhinakaran

மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உறுப்பினருமான பி.மணி ஷ்யாம் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாலளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 
மூத்த பத்திரிகையாளரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உறுப்பினருமான திரு. பி.மணி ஷ்யாம் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.


திரு.பி.மணி ஷ்யாம் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் சக பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.