இஸ்ரோவின் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் உயிரிழப்பு - டிடிவி தினகரன் இரங்கல்!

 
TTV Dhinakaran

தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோவின் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது மறைவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோவின் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமான செய்தி வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.   

அண்மையில் இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்திய சந்திராயன்-3 விண்கலம் உட்பட கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட்கள் ஏவுதலின் போது ஒலித்த விஞ்ஞானி வளர்மதியின் குரலை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.  விண்வெளித்துறையில் இந்தியாவின் வளர்ச்சி இன்று பெருமளவு உயர காரணமான பெண் விஞ்ஞானிகளில் ஒருவரான வளர்மதியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.