மூத்த புகைப்பட கலைஞர் சு.குமரேசன் மறைவு - டிடிவி தினகரன் இரங்கல்

 
TTV Dhinakaran

விகடன் நிறுவனத்தின் முன்னாள் தலைமை புகைப்பட கலைஞர் சு.குமரேசன் மறைவிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

விகடன் நிறுவனத்தின் முன்னாள் தலைமை புகைப்பட கலைஞரும் மூத்த புகைப்பட பத்திரிகையாளருமான சு.குமரேசன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 


டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விகடன் நிறுவனத்தின் முன்னாள் தலைமை புகைப்பட கலைஞரும் மூத்த புகைப்பட பத்திரிகையாளருமான சு.குமரேசன் அவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரின் மறைவு புகைப்பட பத்திரிக்கை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தனித்துவமிக்க புகைப்பட கலைஞராக திகழ்ந்த குமரேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.