டிடிவி தினகரனுக்கு நெஞ்சுவலி...!அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
Apr 11, 2025, 11:15 IST1744350331414

நெஞ்சுவலி காரணமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் டிடிவி தினகரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்கானித்து வருகின்றனர். டிடிவி தினகரன் நலமுடம் இருப்பதாகவும் அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலைவர்கள் பலரும் டிடிவி தினகரன் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.