"எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பணமாகவும் திகழ்ந்த புரட்சித் தலைவர்" - தினகரன் புகழாரம்

 
ttv

எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பணமாகவும் திகழ்ந்த  புரட்சித் தலைவர் எம்ஜிஆரை போற்றி வணங்குவோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

mgr

இதுத்தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "பேரறிஞர் அண்ணா அவர்களின் உண்மைத் தொண்டனாக தன்னை அர்ப்பணித்து இறுதிமூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்த நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று... 


வறியவர்களுக்கு வள்ளலாகவும், எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பணமாகவும் திகழ்ந்த  புரட்சித் தலைவர் அவர்களை போற்றி வணங்குவதோடு, இதய தெய்வம் அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்திட இந்நாளில் உறுதியேற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.