திமுகவினர்களில் ஒருவர் கூட வெளியில் தலைகாட்ட முடியாது- டிடிவி தினகரன் எச்சரிக்கை

 
TTV STALIN

நாடு போற்றும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படக் கூடிய தலைவர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்கள் குறித்து திமுக அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் தரக்குறைவான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

ttv dhinakaran

மறைந்த திமுக தலைவர் திரு. கருணாநிதி அவர்கள் குறித்து மறைந்த திரு. நாஞ்சில் மனோகரன் அவர்கள் எழுதிய “கருவின் குற்றம்” என்ற கவிதை குறித்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய “வனவாசம்” குறித்தும் இதயதெய்வம் அம்மா அவர்களின் தொண்டர்கள் பேச ஆரம்பித்தால் தா.மோ.அன்பரசன் போன்ற திமுகவினர்களில் ஒருவர் கூட வெளியில் தலைகாட்ட முடியாத சூழல் ஏற்படக்கூடும். எனவே, தமிழக மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்து மறைந்த தலைவர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் திமுகவினரை பேச விட்டு ரசிக்கும் கீழ்த்தரமான செயல்களை அடியோடு நிறுத்துவதோடு, இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுமாறு திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.