மாவீரர் வாளுக்குவேலி அம்பலத்தின் பிறந்தநாள் - தினகரன் ட்வீட்
தென்பாண்டி சிங்கம் என போற்றப்பட்டவருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட, சிவகங்கை வட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பாகனேரி, உள்ளது. இதன் தலைவராக இருந்தவர் வாளுக்குவேலி அம்பலம். மருது பாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய வாளுக்கு வேலி அம்பலத்தின் போர்ப்படைகள் வெள்ளையர்களுக்கெதிரான போரில் மருதுபாண்டியர்களுக்கு பெரிதும் உதவின. வேலு நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து, இவர் போரில் ஈடுபட்டதை, சிவகங்கை சரித்திர அம்மானை சொல்கிறது. அக்டோபர் 24 ,1801 ல் கத்தப்பட்டு என்ற ஊரில் சூழ்ச்சியால் இவர் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் இவரின் நினைவாக, இவரது சகோதரர் கருத்தப்பன் அம்பலத்தால் நடுகல் வைத்து வணங்கி வருகின்றனர். அங்கு வாளுக்குவேலி அம்பலம் சிலை கையில் ஈட்டி மற்றும் வளரி வைத்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. இவருடைய நினைவாகவும் மற்றும் வீரத்தை போற்றும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூன் 10ஆம் தேதி, அப்பகுதி மக்கள் பொங்கல் படையலிட்டு, வீர வணக்க நாளாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர், தென்பாண்டி சிங்கம் என போற்றப்பட்டவருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாள் இன்று.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர், தென்பாண்டி சிங்கம் என போற்றப்பட்டவருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாள் இன்று.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 10, 2023
18ஆம் நூற்றாண்டில் பாகனேரி நாட்டின் தலைவராக திகழ்ந்த மாவீரர் வாளுக்குவேலி அம்பலம், மருது சகோதரர்களுக்கு துணை நின்று ஆங்கிலேய…
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர், தென்பாண்டி சிங்கம் என போற்றப்பட்டவருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாள் இன்று.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 10, 2023
18ஆம் நூற்றாண்டில் பாகனேரி நாட்டின் தலைவராக திகழ்ந்த மாவீரர் வாளுக்குவேலி அம்பலம், மருது சகோதரர்களுக்கு துணை நின்று ஆங்கிலேய…
18ஆம் நூற்றாண்டில் பாகனேரி நாட்டின் தலைவராக திகழ்ந்த மாவீரர் வாளுக்குவேலி அம்பலம், மருது சகோதரர்களுக்கு துணை நின்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிவுடன் எதிர்த்து, சூழ்ச்சியால் வீரமரணம் அடைந்தவர்.
சிவகங்கை மாவட்டம் பாகனேரி சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் வாளுக்குவேலி அம்பலத்தை தங்கள் குல தெய்வமாகவே வழிபடுகின்றனர். மாவீரர் வாளுக்குவேலி அம்பலத்தின் பிறந்த நாளில் அவரது துணிவு மிக்க ஆளுமையை நினைவு கூர்ந்து போற்றுவோம். என்று குறிப்பிட்டுள்ளார்.


