பழைய ஓய்வூதியக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - டிடிவி தினகரன் கேள்வி!!

 
ttv

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியக் கொள்கையை செயல்படுத்துவதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

govt

தமிழ்நாட்டில்கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியமும், அவர்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்விணையருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும்.  ஆனால் காலப்போக்கில்   புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.  இதனால் தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.   இதுதொடர்பாக 2021-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ள நிலையில், இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
 

tn
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியக் கொள்கையை செயல்படுத்துவதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். தேர்தல் நேரத்தில் அள்ளிவிட்ட பல பொய் வாக்குறுதிகளைப் போலவே, 'பழைய ஓய்வூதியக் கொள்கையை செயல்படுத்துவோம்' என்று திரு.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியும் காற்றோடு போய்விட்டதா? நிதி இல்லாததால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று நிதியமைச்சர் கூறியிருப்பதற்கு திரு.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்? மக்களை ஏமாற்றியதைப்போலவே தற்போது ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ள அரசு ஊழியர்களையும் ஏமாற்றப்போகிறார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.