100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் தற்கொலை - வாய்கிழிய பேசும் திமுக அரசு!!

 
ttv dhinakaran

100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர்  நாகலட்சுமி தற்கொலை செய்துகொண்ட நிலையில் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

tn

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி நாகலட்சுமி. இவருக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில் வேலைவாய்ப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதன் பேரில் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணி இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை  ஆண்டுகளாக இந்த பணியில் இருந்து வந்த நாகலட்சுமி கடந்த மாதம் 13ஆம் தேதி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாவட்ட ஆட்சியருக்கு அவர் எழுதிய கடிதம் சிக்கியது.  அதில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளராக பணிபுரிய மாவட்ட ஆட்சியர் தன்னை நியமித்த நிலையில் அந்த வேலையை தனக்கு கொடுக்க மாட்டேன் என்று துணை தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார் ,கிளார்க் முத்து ஆகியோர் தகராறு செய்ததாகவும்,  தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும்,  அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி இருந்தார் .இது குறித்து பல மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணியில் இருந்த நாகலட்சுமி, ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு ஒரு மாதம் ஆனநிலையிலும் தற்கொலைக்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ttv

நாகலட்சுமியின் ஐந்து குழந்தைகளும் கணவரும் ஆதரவற்ற நிலையில் உள்ள சூழலில், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ttn

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி வாய்கிழிய பேசும் திமுக அரசு, நாகலட்சுமிக்கு ஆட்சியர் வழங்கிய பொறுப்புக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் மீதும், நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?

நாகலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்துக்கு உரிய சட்ட உதவிகளை செய்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.