தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 
d d

தேர்தல் நடத்தை விதிமீறில் தொடர்பாக திமுக எம்.பி, அதிமுக முன்னாள் எம்.பி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகமும் சதையுமாக இருந்த தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன்.. இப்படி சண்டை போட  காரணமான அந்த கூட்டம் | why fight between ttv dinakaran and thanga tamil  selvan due to aiadmk - Tamil ...

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது தேனி மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேனி காவல்துறையினர் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தங்கத்தமிழ் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதேபோல, தேனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு  ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, டிடிவி தினகரன் உட்பட அமமுக உறுப்பினர்கள் மீது டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் மீது உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மக்களவைத் தேர்தலின் போது திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, அதிமுக முன்னாள் எம்.பி. உதயகுமார் மீது நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உதயகுமார் வழக்கு தாக்கல் செய்தார். இந்த அனைத்து மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திமுக எம்.பி. தங்கத் தமிழ் செல்வன், அதிமுக முன்னாள் எம்.பி. உதயகுமார், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.